முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு வதைபடும் தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பிரச்சார பயணப் பொதுக்கூட்டம்

இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு வதைபடும் தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பிரச்சார பயணம் தொடங்கப்பட்டு, தமிழகத்தின் 4 திசைகளிலும் இருந்து தொடங்கிய இந்த பிரச்சார பயணத்தை ராமேசுவரத்தில் இருந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் இருந்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, கன்னியாகுமரியில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த த ....... மேலும்

இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய் - நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான்.

விகடன் வரவேற்பறையில் தமிழன் தொலைக்காட்சி!


இந்த வார ஆனந்தவிகடன் இதழில் விகடன் வரவேற்பறை பகுதியில் தமிழன் தொலைக்காட்சி வலைப்பக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனந்த விகடனுக்கு நன்றி!!

உலக தமிழ் செம்மொழி மாநாடு அழைப்பை பா.ம.க. ஏற்கிறது: மருத்துவர் இராமதாசு!

உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பை பா.ம.க. ஏற்றுக்கொள்கிறது என்று முதல்வர் கருணாநிதிக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு மருத்துவர் இராமதாசு எழுதியுள்ள கடிதம்....... விவரம்

அமெரிக்காவால் தயாரிக்கபட்ட இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பான அறிக்கை!!

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான மோதலின் இறுதி மாதங்களில் இடம் பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்ட உரிமை மீறல் அல்லது மனிதாயத்திற்கெதிரான குற்றங்களும் அது தொடர்பான தீங்குகளும் இடம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கை ஒன்றை ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களம் அமெரிக்க காங்கிரஸிடம் கையளித்துள்ளது என இலங்கையில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் தூதரகம் விடுத்துள்ள பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு............. http://www.tamilantelevision.com/articles-news.php#1256246457

இலங்கையில் தமிழர்களை திட்டமிட்டு பிரித்து சிதைத்துள்ளனர் - திருமாவளவன்

இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இலங்கைத் தமிழர் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
உள்நாட்டில் பிரிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களும், புலம் பெயர்வாழ் தமிழர்களும் ஒன்று பட்டு கூட்டு அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்கினால் மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பும் உரிமையும் உறுதிப்படுத்தப்படும்.
நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தங்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கதறி அழுது கண்ணீர் மல்கி எங்களிடம் மன்றாடி கேட்டுக்கொண்டனர்.
இலங்கை பயணம் தொடர்பாகவும் அகதி முகாம்களில் மக்களின் உண்மை நிலை குறித்தும் விளக்கி தமிழக முதலமைச்சரின் மூலமாக இந்திய மத்திய அரசுக்க அறிக்கையினை சமர்ப்பிப்போம்.
மேலும், விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தனியான அறிக்கை ஒன்றையும் நான் சமர்ப்பிப்பேன் என்றார் திருமாவளவன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

தமிழன் தொலைக்காட்சி செய்திகள்